"போலீசார் தாக்கியதால் தான் வாலிபர் பலியானார்..!" மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அமைப்பினர் மனு

போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலியானதாக கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


கோவை: போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலியானதாக கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



கடந்த மாதம் 22-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்ப முயன்றதாக சாகுல்ஹமீது, சையதுஇப்ராகிம் என்ற இருவரை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபர்கள் தப்ப முயன்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்ததால் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

அவர்களை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார், இருவருக்கும் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த அப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சாகுல்ஹமீது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், வாலிபர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைக்கும் போது லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததாகவும், போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால் தான் சாகுல்ஹமீது உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து, வாலிபர் மரணத்திற்கு காரணமான மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மரணம் தொடர்பாக முறையான நீதி விசாரணை வேண்டியும் இன்று காலை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...